கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘தல 55′. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் அனைவரும் தல 55 என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். மேலும் த்ரிஷாவுடன் வரும் காட்சியில் ஸ்டைலிஷாக யூத் லுக்கில் வர இருக்கிறார் அஜித்.
இதற்காக படு ஸ்டைலாக கௌதம் மேனன் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பிற்கு தற்போது ஒரு வார இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சில நாட்களில் துவங்க உள்ள இப்படப்பிடிப்பில் அஜித், அருண் விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.யூத் அஜித்தை தயார் செய்வதற்காகவே இந்த ஒரு வார இடைவெளி எனவும் தெரிவித்துள்ளார் ரத்னம்.
source:kollywoodtoday.com
No comments:
Post a Comment